பஞ்சபுராணம் புத்தகம் 1

sangetam.com

பஞ்சபுராணம் புத்தகம் 1

பாடல் 1

இடரினுந் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை யாளுமா

றீவதொன் றெமக்கில்லையேல்

அதுவோவுன தின்னருள்

ஆவடு துறையரனே….

shiva parvathi

பாடல் 2

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆ ரமுதே

பொய்ம்மையே பெருக்கிப்

பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே

sangetam.com

பாடல் 3

ஓளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே

உணர்வுசூள் கடந்ததோருணர்வே

தெளிவளர் பளிங்கின் திரண் மணிக்குன்றே

சித்தத்துட் தித்திக்கும் தேனே

அளிவளருள்ளத் தானந்தக் கனியே

அம்பல மாடரங் காக

தெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்

தொண்டனேன் விளம்புமா விளம்பே

sangetam.com

பாடல் 4

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்

வஞ்சகர் போயகலப்

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

புவனியெல் லாம்விளங்க

அன்ன நடைமட வாள்உமை கோன்அடி

யோமுக் கருள்புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்

பல்லாண்டு கூறுதுமே

sangetam.com

பாடல் 5

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

Sangeetham class near me? Call now

பாடல் 6

வான்முகில் வழாது பெய்க

மலிவளம் சுரக்க

மன்னன்கோன்முறை அரசு செய்க

குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

நற்தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி

விளங்குக உலகமெல்லாம்.

sangetam.com

நமாப் பார்வதி பததாேய

ஹர ஹர மகாதேவா

தென்னாடுடைய சிவனே போற்றி…!!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!!

திருச்சிற்றம்பலம்!!

sangetam.com

Author: Laxmi
website: sangetam.com